12/7/13

திறப்பின்வழியே வெளியேறும் பாம்பு

            பொறிக்குள் அகப்பட்டிருந்த பாம்பு ஒரு திறப்பின் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது. பழுத்து சுருங்கியிருந்த பாம்பு தடதடக்கும் ரெயில்வண்டியின் உருவை அடையும்வரை பார்த்தபடி நகரும் கண்கள் மௌனத்தின் ஆன்மாவை கொத்தத்துவங்கின. பேரிரைச்சலுக்கு நடனமிடாத பாம்புகள் இவ்வுலகில் உண்டோ? பச்சை ரத்தத்தில் கொதிக்கும் மூங்கில் பாலை ஊறிஞ்சும் வயதில் இனப்பெருக்கம்கொள்ளும் பாம்புகளின் தலைப்பிரட்டைகளை சுண்ணாம்பு தடவிய...

Read more »

7/7/13

அவர்களிடையே காதல் இருந்தது

போலீஸ் வேலை கிடைத்ததும் திவ்யா திரும்பி வந்துவிடுவாளென்று காதலை நம்பிய இளவரசனின் மரணம் வழக்கமான அரசியலுக்குள் சிக்கியிருக்கிறது. நாகரீக காலத்தில்(!) சாதியில்லை யென்ற தொடர் நாகரீக மௌனங்களையெல்லாம் தர்மபுரி செயல்பாடுகள் சற்றே முகர்ந்து பார்த்திருக்கின்றன.  வடஇந்திய ஊடகங்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பாரியச்செயல்பாட்டை யுத்தத்தின் சாயல்களுடன் நடத்திக்கொண்டிருக்கின்றன. திறமையை குழித்தோண்டிப் புதைக்கும் ஆயுதமாக ரூபங்கொண்டிருக்கிற...

Read more »

23/6/13

நிலக்கண்ணிவெடிகளின் சொந்தமுகம்

எதிரிக்காக காத்திருத்தல் என்று கண்ணிவெடிகளை புகழ கவிஞர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிரிகளை பலஹீனப்படுத்த நிலக்கண்ணிவெடிகளை உபயோகிப்பதாக நம்பிக்கைகள் உலவுகின்றன.  எதிரிகளின் நகர்வை தாமதப்படுத்தவே பெரும்பாலும் நிலக்கண்ணிவெடிகள் உதவிச்செய்யக்கூடும்.  பூமியெங்கும் உலவிக்கொண்டிருந்த நானூறு மில்லியன் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களின் பெயரில் உலவவிடப்பட்டிருக்கின்றன....

Read more »

4/3/13

தினம் மரிக்கும் செதில்களோடு உயிர்த்தெழுகிறது காலம்

நிழல் உள்வாங்கும் தருணத்தில் தீபிடித்து எரியும் என் உடல் களைத்த ஒட்டகங்கள் கடந்துபோகின்றன சதா கலைக்கவும் இடம்பெயர்க்கவும் பயமுறுத்தும் மணற்குன்றுகள் சுவாசப்பை நிரப்பும் மணல் துகளில் கலந்துவரும் உன்னையும் எதிர்கொள்கிறேன் மெல்லயெழும் வாதைகளின் நடனத்தின் கச்சிதம் ஈர்க்கையில் ஒப்பந்த விதிகளை புறந்தள்ளுகிறாய் வெளிறிய பிசாசுகள் களைந்த உடைகள் நாட்டப்பட்ட சிலுவைகளில் தொங்குகிறது நாடோடிப்பெண்களை கொள்ளையிடுகையில் இடம்பெயர்ந்தன ரோகிகளின்...

Read more »

16/2/13

சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட்டும் ஜெயலலிதாவின் துர்சொப்பனங்களும்

ஆசிட் வீச்சால் கொடுமையாக முகம் பாதிக்கப்பட்டிருந்த சந்திரலேகாவின் அம்மா ஒரு எழுத்தாளரென்பது லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவில் தான் பலருக்கும் தெரியவந்தது. நீல.பத்மநாபனின் கூடவே உணவிற்கு கிளம்பிப்போனவர்களில் சந்திரலேகாவின் அம்மாவும் இருந்தார். கோவை உணவின் ருசியை அறிவதற்காக கைச்சோற்றை வாய்க்கு கொண்டுபோகும் தருணம் வெட்கங்கெட்ட பிரகிருதி சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட் கொடூரத்தை குறித்து விசாரிக்க...

Read more »

குட்டை பாவாடையும் குனிந்து விளையாடும் பெண்களும்

துள்ளலில் உயரும் பாவாடையுடன் நீ விளையாடத்துவங்குகிறாய் புரண்டெழும் மிருகத்தின் சுவாபங்களுடன் விழித்தெழுகிறது கடல் கருகிருட்டில் வீழும் வெண்பறவையாய் மிருகத்தின் நகங்கள் முளைக்கின்றன தொலைந்த பயணத்தின் தொலைவை அளவிட புதிய பயணங்களை துவக்குகிறாய் ஒருவேளை நீந்திகடக்க இக்கடல் அனுமதிக்கும் கடலுக்கும் பயணங்களுக்கும் உன்னைபோல ஒடுங்கிப்போகும் பாக்கியம் வாய்த்ததில்லை என்னையும் அலைகளையும் சிப்பிகள் சேகரிக்கும் குழந்தையாய் மாறிய நீயும் ஒரு...

Read more »

நீலவர்ணத்திலிருந்து தப்பித்தல்

                                                                                                                                                                                               குருசு.சாக்ரடீஸ் குரோதம்...

Read more »

4/1/13

தீவிர இதழின் தயவில் பாலியல்தொழிலாளியாய் சித்தரிக்கப்பட்ட இரு பெண்கள்

தீவிர இதழின் நாகர்கோயில் அலுவலகத்தில் டி.டி.பி ஆப்ரேட்டர் பணியில் புதிதாய் இணைந்த பெண்கள் தங்கள் நெற்றியில் ஒட்டப்படப்போகும் வாழ்நாள் லேபிளைக்குறித்து அறிந்திருக்கவில்லை. உற்சாகம் நிரம்பிய அவ்விரு பெண்களும் பொருளாதார நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மீனாட்சிபுரம் பகுதியில் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பதை பகுதிநேரமாக செய்துவந்தாலும் டிடிபி ஆப்ரேட்டர் பணியை திறமையாகவே செய்துவந்தார்கள்.  பத்திரிகை அலுவலகத்துக்கு...

Read more »

31/12/12

காதறுந்த ஊசி

நேற்று பெய்தது பாலைவனத்து மழை என் பால்யம் விரட்டி சேகரிக்கிறது மழை சிரட்டையில் நிரம்புகிறது ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின்...

Read more »

ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்

உற்பத்திக்கும் எழுத்திற்கும் இடையில் இலக்கியவாதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறான். பாரிய அரசியலில் நுழைந்தவன் எழுத்திற்கு திரும்புவதில்லை. இலக்கிய பரிச்சையத்தை வைத்து வினவு பாணியில் கட்டுரை மட்டுமே எழுத முடியும். ஒரு கதையோ கவிதையோ எழுத குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சாதாரணமாக தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  லௌகீக வாழ்விற்கான பொருளீட்டுவதில் தொலைந்துவிடும் கால அளவு. இலக்கியவாதிகள் கட்டுரை...

Read more »

Pages (7)123456 »